Monday, February 2, 2026

பறவைகளின் அறிஞர் டாக்டர். சலீம் அவர்களை அதிரைக்கு அறிமுகப்படுத்திய அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4(படங்கள் இணைப்பு)!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பாக இந்திய பறவைகளின் அறிஞர் டாக்டர் சலீம் அலி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் சுற்றுச்சூழல் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையை சுற்றுச்சூழல் மன்ற செயலாளர் M.F முகமது சலீம் நிகழ்த்தினார்.வ.விவேகானந்தம் தலைமையேற்றார்.வழக்கறிஞர் ஹாஜி.A.முனாஃப் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியை பேராசிரியர் கா.செய்யது அகமது கபீர் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய பறவைகளின் அறிஞர் டாக்டர் சலீம் அலி அவர்களின் மாணவர் முனைவர் ச.சிவசுப்ரமணியன் அவர்கள் கலந்துகொண்டு டாக்டர் சலீம் பற்றிய பல்வேறு நினைவலைகளையும், பறவைகள் சார்ந்த விளக்கங்களையும்,அழிந்துவரக்கூடிய பறவை இனங்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட வன அலுவலர் மு.அன்பழகன் அவர்கள் வழங்கினார். பங்கெடுத்த அத்தனை சிறப்பு விருந்தினர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.இறுதியாக சுற்றுச்சூழல் மன்ற பொருளாளர் M.முத்துக்குமரன் நன்றியுரை நிகழ்த்தினார்.இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள்,பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img