Home » வார்டு எண் 12ல் கரடுமுரடான சாலை கண்டுகொள்ளாத கவுன்சிலரை கண்டித்து போராட்ட வியூகம் !

வார்டு எண் 12ல் கரடுமுரடான சாலை கண்டுகொள்ளாத கவுன்சிலரை கண்டித்து போராட்ட வியூகம் !

by Admin
0 comment

சாலையை உடைத்து ஒருமாதம் ஆகியும் ஒன்றும் நடக்காத அவலம் – கண்டுகொள்ளாத 12வது வார்டு கவுன்சிலரை கண்டித்து களமிறங்க வியூகம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில்.உள்ள நடுத்தெரு 3வது சந்தில் சாலை அமைக்க வேண்டும் என்பதற்காக அவசர கதியில் பழையை சாலையை உடைத்தனர்.

உடைத்து ஒரு மாதமாகியும் எந்த முன்னெடுப்பும் இதுவரை நடக்கவில்லை.

உடைத்த சாலை பகுதி கரடு முரடாக உள்ளதால் அவ்வழியே செல்லும் முதியோர், சிறார்கள் கீழே விழுவதும் சிராய்ப்பு ஏற்படுவதும் வழக்கமாகி வருகிறது

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களை ஏற்றி செல்ல வாகனங்கள் கூட வர இயலாத அளவிற்கு சாலை உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பலமுறை கவுன்சிலரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலனில்லை. இதனால் விரக்தியடைந்த 12வது வார்டு பகுதி மக்கள் நூதன போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter