Home » திமுகவில் மற்றொரு அதிரையருக்கு மாவட்ட பொறுப்பு!

திமுகவில் மற்றொரு அதிரையருக்கு மாவட்ட பொறுப்பு!

0 comment

திமுகவின் சார்பு அணிகளுக்கான மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணை அமைப்பாளராக அதிரையை சார்ந்த அஸ்கரை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே திமுகவில் மாவட்ட பொருளாளராக எஸ்.எச்.அஸ்லம், சிறுபான்மை நல உரிமை பிரிவின் மாவட்ட தலைவராக ஜமாலுதீன், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளராக புஷ்பராஜ் உள்ளிட்ட அதிரையர்கள் மாவட்ட பொறுப்பு வகித்து வரும் சூழலில் தற்போது அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக அஸ்கர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter