அதிராம்பட்டினம் நகரில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கி விட்டது.
புளுகிராஸ் நாய்களை கொல்ல கூடாது என தடையாணை பெற்றுள்ளதால் நாய்களின் இன பெருக்கத்தை கட்டுப்படுத்த ஊசிகள் செலுத்தப்படுகிறது.
இது பல நகராட்சிகள் பேரூராட்சிகள் முறையாக கடைபிடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றன.
இதனால் நாய்களின் இனப்பெருக்கம் கட்டுகாங்காமல் போய் கொண்டுள்ளது. பொதுமக்கள் நாய்கள் குறித்த புகார் அளித்தால் கண் துடைப்பிற்காக அவைகளை பிடித்து அக்கம்பக்கத்து ஊர்களுக்குள் இறக்கி சென்று விடுவது வாடிக்கையாகி வருகிறது.
அதன் வரிசையில் இன்று இரவு அதிரைக்குள் நுழைந்த மர்ம டெம்போ ஒன்று ஒரே கலரில் 9நாய்களை இறக்கி சென்றதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
இறக்கியவுடன் புதிய ஊர் என்பதால் எங்கே செல்வது என செய்வதறியாது வரிசையாக ECR சாலையில் அமர்ந்திருந்த காட்சியை தத்ரூபமாக படம்பிடித்து அனுப்பி இருக்கார் பைஷல் !
நகராட்சியின் கவனத்திற்கு குளிர் காலங்களில் நாய்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் சூழல் உருவாகிவிடும் இதனை கருத்தில் கொண்டு நாய்களுக்கு உரிய இனப்பெருக்க தடைக்கான ஊசியை செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .