Tuesday, March 10, 2026

மத்திய, மாநில அரசுகளுக்கு நெடுவாசல் பொதுமக்கள் எச்சரிக்கை!

spot_imgspot_imgspot_imgspot_img

நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்ததை கண்டித்து, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி நெடுவாசல் பகுதியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்துக்கு ஆதரவளித்ததாலும், போராட்டம் வலுத்ததாலும், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய, மாநில அரசுகள் உறுதியளித்தன.

ஆனால், உறுதியளித்தபடி எந்த உத்தரவாதமும் நிறைவேற்றப்படவில்லை என்பதால், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நெடுவாசலில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரல் 12ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நெடுவாசல் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img