Monday, February 2, 2026

அதிரையில் பேரூராட்சி, சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் இமாம் ஷாஃபி பள்ளி இணைந்து நடத்திய மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பேரூராட்சி, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஆகியவை இணைந்து நடத்திய ‘தூய்மை இந்தியா’ திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் மற்றும் ‘ஜல்சக்தி அபியான்’ மழைநீர் விழிப்புணர்வு பேரணி நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரணியில், மாணவர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய வரைபடம் மற்றும் விதை பந்துகள் வழங்கப்பட்டன. மேலும் இன்று புதன்கிழமை மாணவர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலை மற்றும் ஊரின் உள்பகுதியிலும் சுமார் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பள்ளி துணை தாளாளர் M.S. முகம்மது ஆஜம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் A. மீனாகுமாரி முன்னிலை வகித்தார். பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் K. அன்பரசன் பேரணியை துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் செயலாளர் M.F. முஹம்மது சலீம் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் நிர்வாக அலுவலர் K. அஷ்ரப் அலி நன்றியுரை வாசித்தார்.

இதில் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் உறுப்பினர் ஷேக் தம்பி, துணை முதல்வர்கள் M. ஜப்பார், மற்றும் J. தபீதா, உடற்கல்வி ஆசிரியர், JRC, NGG, Scout ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img