அதிராம்பட்டினம் எம்.எஸ்.எம் நகர், கே.எஸ்.ஏ லேன், ஷப்னம் லேன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, ஆதம் நகர் ஜமாஅத் நிர்வாகிகள் தலைமை வகித்தனர். இதில், தலைவராக எம்.ஒய் அஹமது ஜலாலுதீன், செயலராக ஜெ. அப்துல் காதர், பொருளாளராக எஃப். சிராஜுதீன், துணைத் தலைவராக ஆர். அசன் அலியார், துணைச் செயலாளர்களாக எஸ். அசாருதீன், எஸ். ஹாதில் அஹமது, துணைப் பொருளாளர்களாக ஏ. அப்துல் ஹக்கீம், எம்.ஏ பயாஸ் அகமது, ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக எஸ். அப்துல் ஜலீல், இ. வாப்பு மரைக்காயர், என்.பாவா பகுருதீன், ஆர். அஹமது ஹாஜா, எம். சகாபுதீன் ஆகியயோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் ஆதம் நகர் ஜமாத்தார்கள் பலர் இக்கூட்டத்தில் ஆதம் நகர் ஜமாத்தார்கள் பலர் கலந்துகொண்டனர்.