222
தமிழகம் முழுவதும் பல இடங்களில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.
அதே போல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் இன்று திராவிட முன்னேற்ற கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு அதிரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
இப்போராட்டத்தில், பேரூர் கழக துணை செயலாளர் A.M.Y.அன்சர்காண், பேரூர் கழக செயலாளர் இராம குணசேகரன், ஒன்றிய செயலாளர் பா.இராமநாதன், ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மறைக்கா கே.இதிரிஸ் அஹமது, ஒன்றிய நிர்வாகிகளான சுஹைப், K.S.பிரகாஷ், R.S.மனோகர், A. நூர் முகமது, T.முத்துராமன் போன்ற பல திமுகவினர் ஈடுபட்டனர்.