சமூல வலைதளமான வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த 16 வயது நிரம்பியிருக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 89% மக்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களும் அடங்குவர், அவர்கள் தினமும் 5 மணி நேரம் வாட்ஸ் அப்பிற்கு அடிமையாதி சாட்டிங்கிலே மூழ்வதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போன்களில் அதிகளவு மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தும் முதல் இடத்தை இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் 16 வயதுக்குட்பட்டவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும், மேஜர்ஸ் மட்டுமே வாட்ஸ் அப்பை பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதிச் செய்யுமாறு ஐரோப்பிய பொது தகவல் பாதுகாப்பு ஒழுங்குமுறை சார்பில் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை பரிசீலித்த வாட்ஸ் அப் நிறுவனம் வரும் மே மாதம் 25-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது. ஆனால் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் வயது வரம்பு எவ்வாறு சரிபார்க்கப்படும் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.