தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் காவல் ஆய்வாளராக தியாகாராஜன் அவர்கள் பணியாற்றி வருகிறார்.
இதனிடையே, அதிரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜாதி கொலைகள், ஜாதி மோதல்கள், சட்ட ஒழுங்கு சீர்குலைவு, கஞ்சா, லாட்டரி, சூது மற்றும் 24மணிநேரமும் மது விற்பனை ஆகியவையை நடவடிக்கை எடுக்காத தியாகராஜன் அவர்களை கண்டித்து “அமைதி வேண்டும், அமைதி வேண்டும்” என்ற தலைப்பில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன போஸ்டர்கள் அதிரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த குற்றச்சாற்றுகல் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.