அதிரை எக்ஸ்பிரஸ்:- கோவை குனியமுத்தூரில் வங்கிக் கணக்கில் நான்கரை லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ள சம்பவத்தில் நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆணையரகத்தில் மனு அளித்துள்ளார்.
குனியமுத்தூரைச் சேர்ந்த உசேன் பீவி என்பவர், கணவரின் ஓய்வூதியத் தொகையை பெறுவதற்காக வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றார். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் இருந்த நான்கரை லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தங்கள் வங்கிக் கணக்கில் நஜீமாபேகம் என்பவர் ஏடிஎம். அட்டை பெற்றதாகக் கூறும் அதிகாரிகள், வேறு எந்த தகவலையும் கூறாமல் அலைக்கழிப்பதாக உசேன் பீவி குற்றம்சாட்டியுள்ளார்.
ஒருவரது வங்கிக் கணக்கிற்கு மற்றொருவர் எப்படி ஏ.டி.எம். வாங்க முடியும் என்ற கேள்வி எழுவதால் இந்த மோசடியில் வங்கிக்கும் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், நடவடிக்கை கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.