160
பட்டுக்கோட்டை- காரைக்குடி வரையிலான அகல பாதை பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இந்த மார்க்கத்தில் இரயிலை இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தனர்.
இதனை அடுத்து காரைக்குடி- பட்டுக்கோட்டைக்கு பயணிகள் ரயிலை இயக்க தென்னக ரயில்வே கோட்ட பொறியாளர் அனுமதி வழங்கினார்.
இதனை தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சோதனை அடிப்படையிலான பயணிகள் ரயில் இயக்கபடும் என்றும், அதன்படி முதன் முதலாக பயணிகள் இரயில்.இன்று நன்பகல் 12 மணிக்கு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தை அடைந்தது.
இதனை பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.