அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
பல்வேறுபட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வெளியேறி விட்ட நிலையில், இன்று கௌதியா 7s நாகூர் – ஜெகன் மெமோரியல் தூத்தூர் அணிகள் இறுதிப் போட்டியில் களம் கண்டன.
முன்னதாக கிராஅத் ஓதப்பட்டு இந்த இறுதிப்போட்டியை தஞ்சை மாவட்ட கால்பந்து செயலர் வேலுச்சாமி,சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் MSM.அபூபக்கர், காதிர் முஹைதீன் பள்ளியின் முன்னால் உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன், முன்னால் தலைமையாசிரியர் மஹ்பூப் அலி, சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் விவேகானந்தம், அதிரை பேரூர் சுகாதார அதிகாரி, முன்னால் பாண்டிச்சேரி கால்பந்து வீரர் லியாகத் அலிகான் ஆகியோர் வீரர்களுக்கு கை கொடுத்து ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.
சாம்பியன் வெல்லும் முனைப்புடன் இரு அணியினரும் அதிரை ரசிகர்களில் பலத்த கரகோஷ ஒலிகளுக்கு மத்தியில் விளையாடினர்.
முதல் பகுதி நேர அட்டத்தில் தூத்தூர் கன்னியாகுமரி அணி முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது.
இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தின் நடுவில் நாகூர் அணி கோல் அடிக்க வீரர்களிடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது.
இருந்த போதிலும் தொடர்ந்து ஆடிய தூத்தூர் கன்னியாகுமரி அணி மீண்டடுமொரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
இறுதியாக ஜெகன் மெமோரியல் தூத்தூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நாகூர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முதல் பரிசு பெற்ற ஜெகன் மெமோரியல் தூத்தூர் கன்னியாகுமரி அணிக்கு ₹ 35,015 ரொக்கமும், வின்னருக்கான சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது.
இப்போட்டியில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட கௌதியா 7s நாகூர் அணிக்கு ₹ 25,015 ரொக்கமும் ரன்னருக்கான சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது.
விழா முடிவினில் அதிரை AFFA அணியின் ஆலோசகர் அஹமது அனஸ் நன்றியுரை கூறினார்.