தமிழகத்தையே உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் ரெய்டுகள் நடத்தி வருகின்றனர். டிஜிபி ராஜேந்திரன் வீட்டிலும் சிபிஐ ரெய்டு நடைபெற்றது.
இதனிடையே டிஜிபி அலுவலகத்தில் தற்போது ரெய்டு துவங்கியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக தலைமைச் செயலகத்தில் அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் துணை ராணுவத்தினர் உதவியுடன் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இப்போது ஒரு டிஜிபி அலுவலகத்தில் ரெய்டு நடந்து வருகிறது. மாநிலத்தின் மொத்த சட்டம் ஒழுங்கையும் காப்பாற்றக்கூடிய காவல் துறையின் உச்சபட்ச பதவிதான் டிஜிபி என்பது. ஆனால் அந்த அலுவலகத்திலேயே முறைகேடு தொடர்பாக சிபிஐ ரெய்டு நடத்தி உள்ளது, தமிழகத்திற்கு தேசிய அளவில் அவப்பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.