தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு பள்ளிவாசல் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஒரத்தநாடு தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(03/01/2019) காலை 11மணியளவில் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து, நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டது மட்டுமின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் தடைவிதித்திருந்தனர்.
இந்நிலையில், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடக்க இருந்த பகுதியை நோக்கி வருகைதந்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த ஆர்ப்பாட்டம் தடையை மீறி நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மதுக்கூர் பவாஸ் காண், மாநில தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
இதனையடுத்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.