தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சியை நம்பாமல் TIYA சங்கத்தின் இளைஞர்கள் தாங்களாக முன்வந்து மேலதெரு பகுதிகளில் உள்ள குப்பைகளையும் , சாக்கடைகளையும் சுத்தம்செய்து வருகின்றனர்.
விரிவான செய்தி:-
அதிரை மேலதெரு TIYA சங்க இளைஞர்கள் முன்வந்து சுமார் மூன்று நாட்களாக ,தற்பொழுது வரை குப்பைகளை அகற்றி டெங்கு காய்ச்சலில் இருந்து அப்பகுதியை பாதுகாக்க முன்வந்துள்ளனர்.
இதுவரை அந்த சங்கம் சார்பில் பல இடங்களில் 10க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி மற்றும் வீடு வீடாக சென்று டெங்கு மற்றும் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாக கூறியுள்ளனர்.
முக்கியக் கோரிக்கை:-
இளைஞர்கள் ஓரிடத்தில் சேர்த்து குப்பைகளை எடுத்து செல்லுமாறு TIYA சங்க இளைஞர்கள் அதிரை பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி அவர்கள் ஈடுபடும் இந்த முயற்சிக்கு நிதி தொகை துபாய் வாழ் அதிரை TIYA சங்கத்தின் சார்பில் தரப்பட்டது என்று அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து ,இந்த இளைஞர்களின் முயற்சியால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.