Home » தமிழகத்தில் 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு… என்னென்ன சேவைகள் பாதிக்கும் ?

தமிழகத்தில் 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு… என்னென்ன சேவைகள் பாதிக்கும் ?

0 comment

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உட்பட நாடு முழுக்க 75 மாவட்டங்களை முடக்கி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இங்கு மார்ச் 31ம் தேதிவரை பொதுப் போக்குவரத்து இருக்காது. கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் இருக்க கூடிய அளவுக்கு, உள்ள 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை தலைநகராக இருக்கின்றது. எனவே கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் எல்லையில் அமைந்துள்ளது. எனவே அதுவும் முடக்கப்படுகிறது. ஈரோடும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

●இந்த மாவட்டங்களில், பஸ், ரயில், விமானம் போன்ற பொதுப் போக்குவரத்து சேவை என்பது இருக்காது.

●144 தடை உத்தரவு போடப்பட்டது போல காட்சியளிக்கும்.

●அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து மாத்திரைகள், காய்கறிகள் போன்றவை கிடைக்கும்.

●அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து பிற சேவைகளில் பாதிப்பு ஏற்படும். இதில், பொதுப் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் அடங்கும்

●பிற பகுதிகளில் இருந்து இந்த மாவட்டங்களுக்குள் மக்கள் வரவும், அங்கேயிருந்து வேறு பகுதிக்கு போகவும் தடை நிலவும்.

●கலாசார நிகழ்ச்சிகள் நடத்த முடியாது, பொது நிகழ்ச்சிகள் நடத்த முடியாது

●திருமணம் உள்ளிட்டவற்றை செய்தாலும் கூட அதிக கூட்டம் சேர்க்க கூடாது

●144 தடை உத்தரவுக்கு, என்னென்ன நடைமுறைகள் உண்டோ அவை இருக்கும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter