அதிராம்பட்டினத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 19 பேர் வீடு திரும்பினர்.
இந்நிலையில் இன்று அதிராம்பட்டினத்தை சேர்ந்த கடைசி நபரும் வீடு திரும்பியுள்ளார்.
ஊர் திரும்பிய அவருக்கு, அதிராம்பட்டினம் பேரூராட்சி, காவல்துறை மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனால் அதிராம்பட்டினம் தற்போது கொரோனா இல்லாத பகுதியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.