தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே செம்பருத்தி நகரில் ஐந்து குடிசை வீடுகள் எரிந்து நாசம்.
அந்த பகுதியில் வசிப்பவர்கள் தினக்கூலி வேலைக்கு வழக்கம்போல் சென்றிருந்தனர்.குடியிருப்புகளில் யாரும் இல்லை.இந்நிலையில் இன்று(ஜூன்.4) மதியம் 2 மணியளவில் எதிர்பாராதவிதமாக குடிசை ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் தீயானது பக்கத்தில் உள்ள குடிசைகளிலும் பரவத்தொடங்கியது. புகை மண்டலத்தை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீ மேலும் பரவா வண்ணம் தடுக்க தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.
மேலும் பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த உடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகன உதவியுடன் தீ பரவாமல் தீயை தீயணைப்பு அதிகாரிகள் அணைத்தனர்.இந்த தீவிபத்தில் ஐவரின் வீட்டிலிருந்த அரிசி,மளிகை பொருட்கள்,ஆடைகள்,நெல் மூட்டைகள் என அனைத்தும் எரிந்து நாசமாயின.சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை எப்படி தீ விபத்து நேர்ந்தது என விசாரணை மேற்கொண்டு வருகிறார்.




