புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு நிர்வாகத்திற்கான முக்கிய முடிவுகளை துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன் எடுத்து வருகிறார்.இந்த நிலையில் கொரோனா பரவலால் புதுவையில் வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து மதுபான கடைகள், கள்ளுக் கடைகள், சாராயக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலால்துறை வெளியிட்டுள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் மதுபானக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தினம் தினம் உச்சம் அடைந்து வரும் நிலையில் புதுச்சேரியை பின்பற்றி தமிழகத்திலும் மதுபானக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா பரவல் எதிரொலியாக புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடல் – தமிழகத்திலும் மூடப்படுமா ?
215