இரண்டாம் அலை கொரோனா தொற்று அதிவேக பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஊரடங்கால் சாமானிய மக்கள் வேலையின்றி உணவுக்கு கூட வழியில்லாமல் மிகசிரமத்துக்குள்ளாகினர். இந்த ஆண்டும் 14 நாட்கள் ஊராடங்கள் பெரும்பாலான மக்கள் உணவுகளுக்கு தடுமாறிக்கொண்டு வந்தனர். இதனை கருத்தில்கொண்டு சமூக ஆர்வலர்கள் , பல்வேறு அமைப்புங்கள் ஏன்ற உதவிகளையும் உணவுகளையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம்
அதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் சார்பாக இன்று அதிரை பேரூந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏழை வழிபோக்கர்களுக்கு பிரியாணி உணவுகள் சுமார் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்வுவில் ரோட்டரி சங்க தலைவர் Rtn.ஸ்.,சாகுல் ஹமீது, செயலாளர் Rtn A.ஜமால் முகமது, முன்னால் தலைவர் Rtn.M.K.முகமது சம்சுதீன் மற்றும் முன்னால் செயளாலர் Rtn.Z.அகமது மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



