121
அதிரையில் மக்கள் கூடும் பகுதிகளாக மீன் மார்க்கெட், வண்டிப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், மெயின் ரோட்டில் இருப்பதுபோல் மீன் மார்க்கெட், வண்டிப்பேட்டை, அதிரைக்கான நுழைவாயில் என அழைக்கப்படும் ஈ.சி.ஆர் ரெயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் அரசு தரப்பில் விரைவில் கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.