Home » 8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

0 comment

தமிழகத்தில் மேலும் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தொழில்நுட்ப கல்வி இயக்குநராக லஷ்மிபிரியா IAS,

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா IAS,

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையராக வள்ளலார் IAS,

சமக்ரா ஷிக்ஷாவின் மாநில திட்ட இயக்குநராக சுதன் IAS,

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநராக சரவணவேல்ராஜ் IAS,

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக மரியம் பல்லவி பல்தேவ் IAS,

ஆவின் மேலாண் இயக்குநராக கந்தசாமி IAS,

சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக அன்சுல் மிஸ்ரா IAS,

மாநில வளர்ச்சிக் கொள்கை குழு உறுப்பினர் செயலாளராக பாஸ்கர பாண்டியன் IAS,

நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநராக வினய் IAS,

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குநராக ஜெயகாந்தன் IAS,

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக அமுதவல்லி IAS,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குநராக தட்சிணாமூர்த்தி IAS உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த பிரவீன் நாயர் IAS, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநராகவும்,

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த அண்ணாதுரை IAS, வேளாண்துறை இயக்குநராகவும்,

வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சண்முகசுந்தரம் IAS, கூட்டுறவுத்துறைப் பதிவாளராகவும்,

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சிவனருள் IAS, பதிவுத்துறை ஐ.ஜி-யாகவும்,

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா IAS, நகராட்சி நிர்வாக ஆணையராகவும்,

கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜன் IAS, நில நிர்வாக ஆணையராகவும்,

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி IAS, சுற்றுலாத்துறை இயக்குநராகவும்,

தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த கோவிந்தராவ் IAS, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter