உலகை அச்சுறுத்தும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் சற்று ஓய்திருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நோயின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இதனால் கேராளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் முக்கிய பண்டிகையான ஆடிப்பெருக்கு நிகழ்ச்சிகளை வீடுகளிலேயே நடத்தி கொள்ள உத்தரவு பிறப்பித்து கோவில்களில் நடக்கவிருந்த சிறப்பு பிரார்த்தனைகளுக்கு தடையும் விதித்து இருக்கிறது.
தமிழக எல்லைக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் கொடிய கொரோனா பல்வேறு மாவட்டங்களில் தமது கை வரிசையை காட்ட தொடங்கியுள்ளது.
எனவே அதிரை நகர பொதுமக்கள் தேவையற்ற முறையில் வெளியில் சுற்றுவதை நிறுத்தி கொள்வதோடு முககவசம் சமூக இடைவெளி ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.