அதிரை நகராட்சிக்கான தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஆள் கிடைக்காததால் என்ன செய்வது என தெரியாமல் அதிமுக நிர்வாகிகள் திகைத்துப்போய் உள்ளனர். இந்நிலையில் அதன் தலைமை கழகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அதிரையின் 6வது வார்டை தவிர பிற வார்டுகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் தந்தை, கணவர் பெயர்களையும் குறிப்பிட்டு இடம்பெற்று இருந்தன. இதனை கண்டு அதிமுக-வினர் மகிழ்ச்சியடைந்த நிலையில், 2வது வார்டு அஜிகா (க/பெ கௌஸ் முகம்மது), 7வது வார்டு காமிலா (க/பெ முகம்மது இப்ராகிம்) ஆகியோர் தங்களுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பே இல்லையென கூறி அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தனர். சிலர், போயும்போய் அந்த கட்சி சார்பில் எல்லாம் எவனாவது போட்டியிடுவான என ஆவேசமாக பேசி இருக்கிறார்கள். இதனால் என்ன செய்வது என தெரியாத நகர அதிமுக, அவசர அவசரமாக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில் எழுத்து பிழை நடந்துவிட்டதாக கூறி புதிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு பின்னால் தந்தை, கணவர் ஆகியோரது பெயர் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அதிரையில் வேட்பாளர் பட்டியல் உருவில் வந்தது வினை! கரைசேருமா அதிமுக?
63
previous post