50
அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவியை கூட்டணி தர்மத்தையும் மீறி திமுக அதிருப்தி கவுன்சிலர்களின் ஆதரவோடு திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் கைப்பற்றினார். இதனால் 2 வாரங்களாக அதிரை அரசியலில் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் அதிரை நகராட்சி மன்றத்தின் அவசர கூட்டம் இன்று கூடுகிறது. மாலை நடைபெறும் இந்த கூட்டத்தில், என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.