ஹிஜாப் தடைக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதன்படி இன்று மாலை அதிராம்பட்டினம் ததஜ சார்பில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இதன்பிறகு சென்னைக்கு போகும் வழியில் ஒரத்தநாட்டில் வைத்து ஜமால் உஸ்மானி மற்றும் வல்லம் ஜாபர் ஆகியோரை ஒரத்தநாடு காவல்த்துறை கைது செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.