Home » அதிராம்பட்டினம் தாலுகா! வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர்!! -Z.சாலிஹ்

அதிராம்பட்டினம் தாலுகா! வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர்!! -Z.சாலிஹ்

by
0 comment

காந்தியின் கிராம ராஜ்ஜியம் கனவு 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இன்னும் நிறைவேறவில்லை. அண்ணாவின்  சுயாட்சி தத்துவமும் கிடப்பில் தான் கிடக்கிறது. அதேபோல் தான் அதிராம்பட்டினம் கடலோர மக்களின் வட்டார ஆட்சிக்கான உரிமையும்.

தமிழ்நாடு அரசின் வளர்ச்சி திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தாலுகா எனும் வட்டமே தவிர்க்க முடியாத பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக தான் கடைமடை பகுதிக்கு அரசின் திட்டங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் அதிராம்பட்டினம் தாலுகாவை உருவாக்கியே ஆக வேண்டும் என்ற கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கின்றனர் மக்கள்.

இந்த சூழலில் சட்டப்பேரவையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை பேசிய பேச்சு, அதிராம்பட்டினம் தாலுகா கனவை தவிடுபொடியாக்கிடுமோ என்ற அச்சத்தை கடலோர மக்கள் மனதில் எழ செய்தது. ஏனெனில் அதிராம்பட்டினத்திற்கு தாலுகா-வை கேட்காமல் வேறொரு ஊருக்கு தாலுகா கொடுங்கள் என அவர் கேட்டார்.

ஆனால், அதன் பின்னர் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் வார்த்தைகள் கடலோர மக்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. ஆம், கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு வருவாய் வட்டங்களில் இருந்து சமீபத்தில் திருவோணம் தாலுகா உருவாக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி மீண்டும் பட்டுக்கோட்டை வட்டத்தின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கணக்கீடு செய்யப்பட்டு அதிராம்பட்டினம் தாலுகாவை உருவாக்க பரிசீலனை செய்யப்படும் என்றார்.

அமைச்சரின் இந்த வார்த்தைகள் தான் அதிராம்பட்டினம் கடலோர மக்களுக்கு சற்று நம்பிக்கையையும் மன ஆறுதலையும் அளித்துள்ளது. இதனை அப்படியே விட்டுவிடாமல் அதிராம்பட்டினம் தாலுகாவை உருவாக்கி தாருங்கள்.. உங்களது கடமையை செய்யுங்கள் கா.அண்ணாதுரை!

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter