Home » (ESC) ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் மின்னொளி கால்பந்து தொடர் : தொண்டியை வீழ்த்தி பட்டுக்கோட்டை சாம்பியன்!!

(ESC) ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் மின்னொளி கால்பந்து தொடர் : தொண்டியை வீழ்த்தி பட்டுக்கோட்டை சாம்பியன்!!

by admin
0 comment

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக முதலாம் ஆண்டு மின்னொளி கால்பந்து தொடர் போட்டி (25.06.2022) சனிக்கிழமை இரவு வீரர்களின் அணிவகுப்போடு காட்டுப்பள்ளி தர்கா எதிர்புறம் உள்ள ESC மைதானத்தில் போட்டி துவங்கியது.

பெங்களூர், திருச்சி, தஞ்சாவூர் போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த கால்பந்து அணிகள் பங்கு பெற்று விளையாடினர்.

இதில், தொண்டி – பட்டுக்கோட்டை அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த இறுதிப் போட்டி வாணவேடிக்கைகளுடன் பரபரப்பாக துவங்கிய மறுகனமே பட்டுக்கோட்டை அணி முதல் கோலை பதிவு செய்து முன்னிலை பெற்றது.

போட்டியின் துவக்கத்திலிருந்தே தொண்டி அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தும் அதனை முறையாக வீரர்கள் பயன்படுத்த தவறியதன் விளைவாக பட்டுக்கோட்டை அணி 1 – 0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்று ESC கால்பந்து தொடரின் முதல் சாம்பியனானது.

முதல் பரிசு பெற்ற பட்டுக்கோட்டை அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹.25,000/- ரொக்கமும், இரண்டாமிடம் பிடித்த தொண்டி அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹.20,000/- ரொக்கமும், மூன்றாமிடம் பிடித்த அதிரை ESC அணிக்கு ₹.15,000/- ரொக்கமும் நான்காமிடம் பிடித்த கும்பகோனம் அணிக்கு ₹.10,000/- ரொக்கமும் வழங்கப்பட்டது.

அதிரையில் அடுத்தடுத்து கால்பந்து தொடர் போட்டிகள் நடைபெற்று வருவதால் கால்பந்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter