குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று இருந்தாலும் மற்ற 6 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல், மாநகராட்சி தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு மெஜாரிட்டி பெற 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அங்கு காங்கிரஸ் 21 இடங்களை மட்டுமே வென்று இருந்த நிலையில் இந்த முறை 40 இடங்களை கைப்பற்றியுள்ளது. மாறாக பாஜக 25 இடங்களுக்கு சுருங்கி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் வெற்றியை அதிரையில் பட்டாசு வெடித்து அக்கட்சியினர் கொண்டாடினர். மேலும் நகர தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.