Home » ஈத் பெருநாள்

ஈத் பெருநாள்

0 comment

ஈந்துவக் கும்திரு நாளாம் இகமதில் ஈத்பெருநாள்
நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம் நீள்தவத்தை
ஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்தான்
சாந்தியாம் சொர்க்கம் கிடைக்கும் உறுதியைச் சாற்றிடுமே

புண்ணியம் செய்தவ ரென்றும் மகிழ்ந்துப் புகழ்ந்திடத்தான்
எண்ணிலா நன்மை பொழிந்திடச் செய்யும் இறையருளால்
மண்ணிலி றங்கிச் சலாமுடன் வாழ்த்தும் மலக்குகளால்
கண்ணியம் செய்வதை யென்றும் நினைத்துக் களிப்புறவே

இற்றைத் திருநாள் நமக்குப் பிறையாய் இறங்கியது
பெற்ற கொடையை விடாமல் நுகர்வோம் பெருமிதமாய்
கற்ற பயிற்சிகள் நிற்க மனத்திற் கவனமுடன்
சற்று முயற்சி எடுப்பதில் நீயும் தயங்கிடாதே!

”கவியன்பன்” கலாம்

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter