
அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி அதிரை ரிச்வே கார்டனில் நடைபெற்றது. இதில் முதலிடம் பிடித்த அபூபக்கரின் மகள் ஆஷிகாவுக்கு 2கிராம் தங்க நாணயமும், அதிரை எக்ஸ்பிரஸ் கேடயமும் வழங்கப்பட்டது. இதேபோல் இரண்டாமிடம் பிடித்த ஷஃபி அஹமதுவின் மகன் அஹ்சனுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும் அதிரை எக்ஸ்பிரஸ் கேடயமும் வழங்கி சிறப்பித்தனர்.

மேலும் ஜெஹபர் அலியின் மகள் அஸ்ரா பர்வீன் மூன்றாமிடத்திற்கான பரிசு மற்றும் கேடயத்தை தட்டிச்சென்றார். இத்துடன் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அனுப்பி வைத்த பாராட்டு கடிதங்களும் வழங்கப்பட்டன. இதனையடுத்து 30 பேருக்கு ஊக்க பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினர்.