Home » அதிரையில் ஆசிரமம் என்ற பெயரில் அத்துமீறல் வீட்டில் எட்டிப்பார்த்த கயவர்கள் – காவல் நிலையத்தில் ஒப்படைப்பு !

அதிரையில் ஆசிரமம் என்ற பெயரில் அத்துமீறல் வீட்டில் எட்டிப்பார்த்த கயவர்கள் – காவல் நிலையத்தில் ஒப்படைப்பு !

by Admin
0 comment

அதிராம்பட்டினம் தரகர் தெருவில் சென்னை ரெட்ஹில்ஸ் அன்னை பாரத மாதா ட்ரஸ்ட் எனும் பெயரில் பழைய துணிகள் வசூல் செய்வதற்காக குட்டியாணை ஒன்றில் கார்த்திக்,நித்திஸ், ஆசிரா பானு,கார்திக் ஆகிய ஐவரும் சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், அன்னை பாரதமாதா அறக்கட்டளை என்றும் பழைய துணிகள் வாங்க வந்ததாகவும், வீடு வீடாக சென்று பழைய துணிகள் வாங்கி ஆசிரமத்தில்.சேர்ப்பதாகவும் கூறுகின்றனர்.

இவர்களை அப்பகுதி இளைஞர்கள் விசாரித்து இருக்கிறார்கள் அப்போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்திருக்கின்றனர் .

இதனிடையே அப்பகுதி இளைஞர்கள் விசாரித்து கொண்டிருக்கும் போதே அப்பகுதி முதியவர் ஒருவர் நானும் என் மனைவியும் வீட்டிருக்கும் போது சுவற்றில் எகிறி பார்த்ததாக கூறியுள்ளார். இதனால் இவர்கள் மீது சந்தேகமடைந்த இளைஞர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்து ஒப்படைத்தனர்.

போலிசார் இவர்களை விசாரித்து வருகிறார்கள்.

எச்சரிக்கை !


அதிராம்பட்டினம் உள்ளிட்ட ஊர்களை குறிவைத்து இதுபோன்ற மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகிறார்கள் இது பொன்று வருபவர்கள் தான் பல்வேறு கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், உதவிகள் கேட்க வருவது போல் நடித்து உளவு பார்த்து கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் இது போன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.என காவல் துறையினர் எசாரிக்கை விடுக்கிறார்கள்.

இதுபோன்று ட்ரஸ்ட் ஆசிரமம் எனும் போர்வையில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அதிகமாகி வருவதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter