238
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில் இன்று மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் சுதந்திர தின விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கிளை தலைவர் K.நஸ்ருதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இளைய சமுதாயமே விழித்துக்கொள்” என்ற தலைப்பில் மாநில செயலாளர் அல் அமீன் உரை நிகழ்த்தினார், மாவட்ட துணைச்செயலாளர் ஆவணம் ரியாஸ் அவர்கள் ” இந்திய சுதந்திரம் யாரால்?” என்ற தலைப்பில் பேசினார்.
இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் சாகுல்,ஜலால்,தவ்ஃபீக் உள்ளிட்டோர் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.