முன்னாள் மத்திய அமைச்சரும் திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர், தான் படித்த அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிக்கு மரியாதை நிமித்தமாக கடந்த 28/08/2023 திங்கட்கிழமை அன்று வருகை புரிந்தார்.
அதிராம்பட்டினம் வருகை புரிந்த அவரிடம், தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயில் அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அதிரை நகர காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது அதிரை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் K. தமிம் அன்சாரி, பட்டுக்கோட்டை வடக்கு வட்டார தலைவர் கோ.வி. செந்தில், நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் N. முகமது மாலிக், நகர கமிட்டி நிர்வாகிகள் திலகராஜ் கட்டபொம்மன், அலி அக்பர், தமிம் அன்சாரி, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் அல்ஹாஜ் சார், பேராசிரியர் செய்யது அஹமது கபீர், மீடியா மேஜிக் நிஜாம் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்பின்போது உடனிருந்தனர்.




