217
தமிழகத்தில் பல இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பலர் தங்களின் கைவரிசையை காட்டி கொள்ளையடித்து வருவதும் அவர்களை தமிழக காவல்துறை கைது செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே திருடன்களை பிடிப்பதற்கும் மக்கள் நலன் கருதி அதிரையில் பல இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலத்தெருவில் அமைந்துள்ள பெரிய ஜும்மா பள்ளியில் cctv கேமிரா பொறுத்த முடிவு செய்யப்பட்டது தற்பொழுது கேமிரா பொருத்தும் பணி முழுமையாக முடிந்துள்ளது. பள்ளியில் சுமார் 14 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது அதில் முக்கிய பகுதிகளில் அதிகமாக மக்கள் நடமாடும் பகுதிகளில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.