184
அதிரை YOUNGSTARS கால்பந்து கழகம்(AYFA) நடத்திய முதலாம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இன்று மாலை நடைபெற்ற இறுதி போட்டியில் அதிரை AFFA அணியினரும் அதிரை AYFA அணியினரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய அதிரை AYFA அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசு 10,000 ரூபாயையும் , சுழற்கோப்பையையும் தட்டிச் சென்றனர். இரண்டாம் இடம் பிடித்த அதிரை AFFA அணியினர் 7,000 ரூபாயை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற அதிரை AYFA அணியினருக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.