Home » AFFA தொடரில் சாம்பியன் ஆகப் போவது யார்? ஓர் அலசல்!!

AFFA தொடரில் சாம்பியன் ஆகப் போவது யார்? ஓர் அலசல்!!

0 comment

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

20 நாட்களாக பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

இதில் சிவகங்கை,காயல்பட்டினம், நாகூர்,(தூத்தூர்) கன்னியாகுமரி அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முன்னால் சாம்பியனான சென்னை, கண்டனூர், நடப்பு சாம்பியனான அதிரை AFFA ஆகிய அணிகள் நாக்-அவுட் சுற்றுகளில் வெளியேறி விட்ட நிலையில், இன்று இறுதி போட்டியில் கௌதியா 7s நாகூர் – ஜெகன் மெமோரியல் தூத்தூர் அணிகள் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களம் கான இருக்கின்றது.

தூத்தூர் கன்னியாகுமரி அணியை பொறுத்தவரை வெளியூர்களில் இதுவரை 50 க்கு மேற்பட்ட தொடர்களில் விளையாடி 30 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது.

கடைசியாக இதற்கு முன்னர் கேரளாவில் நடந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.

ஜூட்ஃபன் தலைமையிலான ஜெகன் மெமோரியல் தூத்தூர் அணியில் கிருஷ்னா, ஆனந்த், ஆல்வின் போன்ற நட்சத்திர வீரர்கள் அணியை முன்னெடுத்துச் செல்வதற்கு முக்கிய பங்காக இருந்து வருகின்றனர்.

நாகூர் அணியை பொறுத்தவரை வெளியூர்களில் இதுவரை 50 தொடர்களில் விளையாடி 26 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

அதிலும் குறிப்பாக கடந்த மாதங்களில் காரைக்காலில் நடைபெற்ற தொடரில், தற்போது நாகூர் அணி நடப்பு சாம்பியனாக திகழ்கிறது.

அபூபக்கர் தலைமையிலான கௌதியா 7s நாகூர்  அணியில் சித்தீக், பக்கர், இம்ரான் போன்ற திறமை வாய்ந்த நட்சத்திர வீரர்கள் இருப்பதனால் இந்த இறுதிப் போட்டி இவ்விரு அணிகளுக்கும் இடையே சரிக்கு சமமானதாக அமைந்துள்ளது.

அதிரையில் சாம்பியனாக தடம் பதிக்க போராடும் நாகூர் அணியும், தூத்தூர் கன்னியாகுமரி அணி முதல் முறையாக தஞ்சை மாவட்ட ஊரில் சாம்பியன் பட்டம் வெல்ல முனைப்பு காட்டுவதாலும், மறைந்த அந்த அணி வீரர் ஜெகனுக்காக வென்று தனது சாம்பியன் பட்டத்தினை அர்ப்பணிக்க தீவரமாக காத்து கொண்டிருப்பதால் இந்த இறுதிப் போட்டி அதிரை கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமைய உள்ளது என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகளும் ஒவ்வொரு காரணங்களுக்காக சாம்பியன் பட்டம் வெல்லும் நோக்குடன் களம் கான்பதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இன்று மாலை 5.30 மணியளவில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter