அதிரையில் நேற்றைய தினம் காதிர் முஹைதீன் கல்லூாரியல் புதியதாக எக்ஸ்னோரா என்கிற அமைப்பு துவங்கபட்டுள்ளது.
இவ் விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் A.முகமது முஹைதீன் தலைமை வகிக்க, கல்லூரிச் செயலாளர் S.J. அபுல்ஹசன் முன்னிலை வகித்தார்.
எக்ஸ்னோரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் K.செய்யது அகமது கபீர் விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்றார்.
இளைஞர்கள் எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் S.P. மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்து வாழ்த்துரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் சமீர் அலி தலைவராகவும், ஐஸ்வர்யா செயலாளராகவும், T.ஜெயசூர்யா பொருளாளராகவும், ரியாஸ் துணைத்தலைவராகவும், S.சத்யா துணைச்செயலாளராகவும் A.முகமது சமீர் மக்கள் உறவுகள் அதிகாரி PRO ஆக தேர்வு செய்யப்பட்டனர்.
இவ்விழாவில், கல்லூரி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிப்பு, மரக்கன்றுகள் நடுதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தல், தூய்மையைப் பேணுதல் ஆகியவற்றை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
விழாவின் முடிவில் கல்லூரியி பேராசிரியை சுமதி நன்றி கூறினார்.