தமிழகம் முழுவதும் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
அதேபோல் அதிரை,மல்லிப்பட்டிணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இன்றும் அதிரையில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து சுமார் 11.30 மணிமுதல் கனமழை பெய்ய ஆரம்பித்தது. இம்மழையால் அதிரை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.