38
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் மக்தப் மதராஷா மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
உலக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகத்தில் மார்க்க கல்வியையும் ஊட்டிட வேண்டும் என்ற ரீதியில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டிணம் போன்ற பகுதிகளில் மக்தப் மதராஷாக்கள் இமாம்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.மல்லிப்பட்டிணம் ஜூம்ஆ பள்ளியில் உள்ள மதராஷாவில் இமாம்களின் மேற்பார்வையில் அரையாண்டு தேர்வு நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
மூன்று வகுப்புகளுக்கு நடைபெறும் இத்தேர்வில் 110 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு தேர்வுகளை எழுதுகின்றனர்.