Home » அதிரையில் தனியார் பள்ளி பேருந்தின் டயர் வெடித்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள் !(வீடியோ)

அதிரையில் தனியார் பள்ளி பேருந்தின் டயர் வெடித்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள் !(வீடியோ)

0 comment

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. அங்கு அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த பல்வேறு மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

தினமும் அவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இன்றும் மாணவர்களை விடுவதற்கு பள்ளி பேருந்து அதிரைக்கு வந்தது.

அப்போது ஈசிஆர் சாலையில் மாணவர்களுடன் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது, திடீரென பேருந்தின் டயர் வெடித்தது. இதனால் பேருந்திற்குள் இருந்த பள்ளி மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பேருந்தின் டயர் வெடித்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்திற்கு காரணம் பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவா அல்லது பள்ளி நிர்வாகத்தின் அலட்சியபோக்கா என தெரியவில்லை. மாணவர்களின் போக்குவரத்திற்கு தனியாக கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தங்களின் அக்கறையை காட்ட வேண்டும் என பெற்றோர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

வீடியோ :

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter