Home » அதிரை நீர்நிலைகளில் முறையாக தூர்வார வேண்டும்! SDPI கட்சியினர் சார் ஆட்சியரிடம் கோரிக்கை !!

அதிரை நீர்நிலைகளில் முறையாக தூர்வார வேண்டும்! SDPI கட்சியினர் சார் ஆட்சியரிடம் கோரிக்கை !!

0 comment

அதிராம்பட்டினம் கரிசல்மணி ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிகளவில் ஒரே இடத்தில் பள்ளம் தோண்டியதாக தெரிகிறது.

இதனை அடுத்து களத்தில்.இறங்கிய அதிரை SDPI கட்சியினர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் சுவை மாறும் என்றும் இதனை அதிகாரிகள் அனுமதிக்க கூடாது என தெரிவித்தனர்.

இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட இயந்திரங்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சார் ஆட்சியரை சந்தித்த SDPI கட்சியினர், அரசு அனுமதிக்கப்பட்ட அளவில் அனைத்து பகுதிகளும் முறையாக தூர்வார வேண்டும், கரைகளை பலப்படுத்தி அதிரை நீர் நிலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அக்கட்சியின் மாவட்ட தலைவர் புகாரி தலைமயில் சென்ற குழுவினர் மனுவாக வழங்கினர்.

இதனை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு விரைவாக தண்ணீர் வழங்க ஆவண செய்வதாக தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter