திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஎம்) 6 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. இதனால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, தொகுதிகள் ஒதுக்கீடு ஆகியவற்றில் கட்சிகள் மும்முரமாக உள்ளன.
திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக – 6; சிபிஐ- 6; விசிக- 6, முஸ்லிம் லீக்-3, மமக-2 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். திமுக அணியில் உள்ள மற்ற கட்சிகளுடனும் இன்றே தொகுதி பங்கீடு முடிக்கப்படும் என கூறப்படுகிறது.