282
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக,முஸ்லீம் லீக், மமக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இக்கூட்டணியில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இன்று வெளியிடப்பட்ட காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அடங்கிய பட்டியலில் பட்டுக்கோட்டை இடம்பெறவில்லை.
இதனால் பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவ்வாறு திமுக களமிறங்குவது உறுதியாக அறிவிக்கப்பட்டால், பட்டுக்கோட்டை தொகுதியில் தாமரங்கோட்டை பார்த்திபன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக வட்டார திமுகவினர் தெரிவிக்கின்றனர்.