அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 87 வது மாதாந்திர கூட்டம்
தேதி:23/04/2021
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 87-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : சகோ. அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. N.அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை : சகோ. P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )
தீர்மானங்கள்:
1) அல்ஹம்துலில்லாஹ் ரியாத் கிளையின் 87வதுமாதாந்திர கூட்டம் இம்முறை ZOOM காணொளி மூலம் ஏழாவது முறையாக இனிதே அல்லாஹ்வின் கருணையோடு நடைபெற்று முடிந்தது.
2) கடந்த வருடம் போல் இவ்வருடமும் ஏழைகளின் உதவி திட்டமான RAMADAN KIT ரியாத் கிளையின் சார்பாக 56 நபர்களுக்கு ரூபாய் 1200 வீதம் வாரி வழங்கிய பெரும் உள்ளங்களுக்கு இனிதே நன்றி தெரிவித்து அவர்களுக்காக துவா செய்யப்பட்டது.
3) இவ்வருடம் ரமலானின் அமல்களில் ஒன்றான ஏழைகளுக்கு பங்கிடப்படும் ஜக்காத் நிதியை பைத்துல்மால் மூலம் அளித்து குர்ஆன் வரையறுத்த படி ஏழைகளின் எட்டு பிரிவினர்களுக்கு சரியான முறையில் சென்றடையும். மேலும் ஏழைகளின் பலதிட்டங்களில் சேவையை மேம்படுத்தும் விதம் ஜகாத் நிதியைஅதிகமாக அளிதிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
4) பித்ரா தொகையை நபர் ஒன்றுக்கு ரியால் 15 வீதம் நிர்ணயிக்கப்பட்டு அதற்கானபங்களிப்பை வரும் ரமலான் பிறை 25க்கு முன்பாக பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.அதற்கு நிகரான அரிசி தலைமையகம் மூலம் சரியான நபர்களை சரியான நேரத்தில் சென்றடையும் என்பதனையும் இக்கூட்டத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் ABMன் பல திட்டங்களுக்கு மாதச் சந்தா வருட சந்தா நிதியினை செலுத்தாதவர்கள். இப்புனித ரமலானில் அதன் பொறுப்புதாரர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
5) சகோதரர் இக்பால் ( HARA ) சவுதி வாழ்க்கையை நிறைவு செய்து தாயகம் செல்ல இருப்பதால் அவருக்கு பிரியாவிடை செலுத்தி இக்கூட்டத்தில் அவர்களுக்கு நன்றி செலுத்தி ABMR ல் உறுதுணையாக செயல்பட்டமைக்கு நன்றி தெரிவித்து இதே சேவையை ஊரில் சென்று தலைமையகம் மூலம் தொடர்பில்பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
6) இன்ஷாஅல்லாஹ் அடுத்த அமர்வு பின்னர் அறிவிக்கப்படும் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்