அதிராம்பட்டினம் நகர முன்னாள் முஸ்லிம் லீக் நகர தலைவர் டாக்டர் முஹம்மது சாலீஹ் அவர்கள் இல்லத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய தமிழக வக்பு வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் இன்று வருகை தந்தார்.
பின்னர் அதிரை எக்ஸ்பிரஸிற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் கூறியதாவது : அதிராம்பட்டினம் தக்வா பள்ளியின் சொத்துக்கள் கண்டறியப்பட்டு அதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்ட நிலையில், வக்பு நிலங்களில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட சிலர் உரிமை கோரி வருகிறார்கள்.
அவர்களிடம் எந்த தஸ்தாவேஜிகள் இருந்தாலும் வக்பு நில சட்ட வரையரைக்கு உட்பட்டு அவர்களை அப்புறப்படுத்த அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில் வருகின்ற காலங்களில் தக்வா பள்ளியின் அனைத்து வக்பு நிலங்களும் மீட்கப்பட்டு நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக வக்பு வாரிய தலைவரை ஐயுஎம்எல் மாவட்ட செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன், நகர தலைவர் K.K. ஹாஜா, நகர செயலாளர் வழக்கறிஞர் முனாஃப், சேக் அப்துல்லா, சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது ஆகியோர் வரவேற்றனர்.



