தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம்(26/10/2021) நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் துரை. ரவிச்சந்திரன் இ.ஆ.ப ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அரசு தலைமை கொறடா கோவி. செழியன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள், தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் துரை. ரவிச்சந்திரன் இ.ஆ.ப, தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப, அரசு தலைமை கொறடா கோவி. செழியன் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் ஜவாஹிருல்லாஹ்(பாபநாசம்), டி.கே.ஜி. நீலமேகம்(தஞ்சை), துரை. சந்திரசேகரன்(திருவையாறு) ஆகியோர் கலந்துகொண்டனர்.