அதிராம்பட்டினம் புதுத்தெரு பகுதியில் அமைந்துள்ளது பாரம்பரியமிக்க மிஸ்கீன் சாஹிப் பள்ளிவாசல், இப்பள்ளிக்கு சொந்தமான குளம் ஒன்று அதனருகில் உள்ளது. இக்குளத்தின் பராமரிப்பு உள்ளிட்ட மராமத்து பணிகளை பள்ளியின் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் குளத்தில் ஆகாய தாமரை அதிகமாக படர்ந்து ஒருவிதமான துர்நாற்றம் வீச தொடங்கியது, இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அக்குளத்தை சுத்தம் செய்து கரைகளை ஆலப்படுத்தி பராமரிக்க முடிவெடுத்து அதற்கான பூர்வாங்க பணியை முடுக்கி விட்டது.
JCB இயந்திரம் மூலமாக கரைகளை ஆழப்படுத்தும் பணியை செய்து வந்த நிலையில் 18வது வார்டு உறுப்பினரின் கணவரும் உள்ளூர் திமுகவின் துணை செயலாளருமான அன்சார்கான் என்பவர் குளத்தை தூர்வார கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனை பேசி தீர்த்துகொள்ள ஏதுவாக பள்ளியின் நிர்வாகம் அன்சர்கானை அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டது. ஆனால் அன்சர்கானோ அதிகார மமதையில் பள்ளியின் பொருளாளரை ஒருமையில் பேசியதோடு அல்லாமல் வெளியே வாடா மூஞ்ச பேத்து விடுகிறேன் என மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
அங்கு நடந்த சம்பவம் அனைத்தும் CCTV கேமராவில் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து விவரித்த பள்ளியின் நிர்வாகம், பள்ளியில் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை போட்டுள்ளார். அதனை பள்ளியின் நிர்வாகத்தின் சார்பில் முறையாக எடுத்து கூறியும் அந்த கொட்டகையை அகற்றவில்லை, மேலும் பள்ளியின் குளத்தில்தான் அவர் வீட்டு கழிவுநீர் அனைத்தும் கலக்கிறது. இதனை தடுக்க நினைத்த நிர்வாகத்தை களங்கப்படுத்துவதோடு, நிர்வாகிகளை ஒருமையில் பேசியுள்ளார்.
மன உளைச்சலில் இருந்த பள்ளியின் நிர்வாகிகள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் உள்ளுர் திமுகவின் துணை செயலாளராக இருக்கும் அன்சார்கான் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு அவர் ஆக்கிரமித்து வைத்துள்ள பள்ளியின் நிலத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டு உள்ளனர்.
