செகந்திராபாத் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் திருவாரூர் – காரைக்குடி மார்க்கத்தில் இம்மாதம் முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. செகந்திராபாத் – ராமேஸ்வரம்(வண்டி எண் : 07685) இடையே வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் டிசம்பர் 28ம் தேதி வரை வாரம் ஒருமுறை புதன்கிழமைகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் – செகந்திராபாத்(வண்டி எண் : 07686) இடையே வரும் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை 7.30 மணியளவில் புறப்பட்டு இன்று வியாழக்கிழமை காலை சென்னை எழும்பூர் வந்து, மாலை 4.34 மணியளவில் அதிராம்பட்டினம் வந்தடைந்து பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் சென்று சேருகிறது.
16 ஆண்டுகளுக்கு பிறகு அதிரையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து அதிரைக்கும் நேரடியாக ரயில் சேவையை வழங்கும் இந்த ரயில், செகந்திராபாத்தில் இருந்து நேற்று புறப்பட்டு சென்னை வழியாக இன்று மாலை 5.50 மணியளவில் அதிரை வந்தது. அதிரை வந்த ரயிலில், அதிரையர்கள் பலர் சென்னையில் பயணம் செய்து அதிரையில் வந்திறங்கினர். அப்போது அங்கு ரயிலை வரவேற்க கூடியிருந்த அரசியல் கட்சியினர், சமுதாய இயக்கத்தினர், பொதுமக்கள் என அனைவரும் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்ததுடன், ரயில் ஓட்டுநர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
செகந்திராபாத்-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயிலை அதிரை மற்றும் சுற்றியுள்ள மக்கள் அதிகமாக பயன்படுத்தும்போது, து நிரந்தரமாக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும், திருவாரூர் – காரைக்குடி வழித்தடத்தில் மேலும் பல விரைவு ரயில்கள் புதிதாக விடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.











வாராந்திர சிறப்பு ரயில் அட்டவணை:

